Breaking News

படுதோல்வி கண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

 
நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் படுதோல்வி கண்டுள்ளது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி. 2010ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவிபியுடன் இணைந்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி, 7 ஆசனங்களைக் கைப்பற்றியது.

ஆனால், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சொற்ப வாக்குகளையே பெற்று தோல்வியுடைந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா படுதோல்வியடைந்தார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார்.

இம்முறை கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக கட்சிக்கு 5,238 வாக்குகளே கிடைத்தன. கம்பகா மாவட்டத்தில் 4,706 வாக்குகளை மட்டுமே ஜனநாயகக் கட்சி பெற்றுள்ளது.கம்பகாவில் அனோமா பொன்சேகா போட்டியிட்டிருந்தார். அவரும் படுதோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.