முன்னாள் எம்பிக்கள் அரச வாகனங்களை உடன் ஒப்படைக்க வேண்டும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ அரச வாகனங்களை உடனடியாக கையளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பணித்துள்ளார்.
அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் பொலிஸார் அதனை கைப்பற்றுவர் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
கட்சி செயலாளர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபருடன் இன்று (03) நடத்தப்பட்ட சந்திப்பின் போது தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு கூறியுள்ளார்.