Breaking News

தேர்தல் நெருங்கும் நிலையில் வன்முறைகளும் அதிகரிப்பு!

தேர்தலும் நெருங்கி வருகின்ற நிலையில் தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறை சம்பங்களும் அதிகரித்து வருவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதி மீறல் குறித்து 866 முறைபாடுகள் தங்களுக்கு கிடைத்திருப்பதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் காவல்துறை தேர்தல் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை, காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தல் திணைக்களத்தில் நியமிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு பிரிவுக்கு இதுவரையில் ஆயிரத்து 75 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.