தேசிய அரசாங்கப் பேச்சுவார்த்தையில், தேசிய குற்றங்கள் மூடிமறைக்கப்படுகின்றன – சந்திரகுப்த
தேசிய அசராங்கப் பேச்சுவார்த்தையில் தேசிய குற்றங்கள் மூடிமறைக்கப்படுவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சந்திரகுப்த தெவினுவர தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாமத் 8ம் திகதி ஆரம்பமான ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகள் வெறும், தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல.கொழும்பு மருதானையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\
மஹிந்த ஆட்சிக் காலத்தில் ரக்னா லங்கா போன்ற நிறுவனங்கள் அரசியல் தேவைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என அவர் தெரிவித்துள்ளார்.நல்லாட்சி கொள்கைகளுக்கு புறம்பாக செயற்படுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.








