Breaking News

இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தெரியவரவில்லை – மனித உரிமை ஆணையாளர்

இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக இப்போது தாம் கருதவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். “விசாரணை செய்யப்பட்ட 9 ஆண்டுகளில், இலங்கையில் மோசதான மனித உரிமை மீறல்களும், துஸ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன.

நீதிக்குப் புறம்பான படுகொலைகள், கட்டாயமாக காணாமற்போகச் செய்யப்படுதல், பாடுபாடின்றி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை, சிறார் படைச்சேர்ப்பு, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், வன்முறைகள், சித்திரவதைகள், மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டமை என்று மிகமோசமான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. எனினும் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக விசாரணையில் தற்போது தெரியவரவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.