Breaking News

தமிழர் செயற்பாட்டுக் குழுவின் இணையத்தளம் அறிமுகம்

சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை

சர்வதேச பொறுப்புக் கூறுல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவினால் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களாக திரட்ப்பட்ட கையொப்பங்கள் ஸ்கான் செய்யப்பட்டு கீழுள்ள இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதை பார்வையிடுவதற்கான இரகசிய கடவுச் சொல் போன்றவை ஐநா செயலாளர் நாயகம், ஐநா மனித உரிமை செயலாளர் நாயகம், மற்றும் ஐநா அதிகாரிகளுக்கும் மற்றும் சர்வாதேச தூதுவர்கள் இராஜதந்திரிகள் , மனித உரிமை அமைப்புகளுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவராலயங்களின் பிரதிநிதிகள் போன்றோரின் பார்வைக்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழர் செயற்பாட்டுக் குழுவின் இணையத்தளம் - இணையத்தள முகவரி http://www.taciam.org/

நன்றி

ஊடக இணைப்பாளர்
சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழு (TACIAM)