Breaking News

சம்பந்தனை ஏற்றுக்கொண்ட மகிந்தவாதிகள்!


எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இன்றுமுதல் செயற்படத் தீர்மானித்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

இதற்கான காரணங்களை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மேல் மாகாண முதலமைச்சருமான பிரசன்ன ரணதுங்க விளக்கியுள்ளார்.சர்வதேச சமூகத்திற்கு சில தரப்பினர் பிழையான தகவல் ஒன்றை வழங்க முயற்சித்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனை சவாலுக்கு உட்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காத ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்றுக்கருத்தாளர் குழுவினரும், பொதுஜன கூட்டமைப்பிலுள்ள சில உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனை நியமிப்பதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.