தனியான கூட்டணிக்கு இணங்காத மகிந்த!
மாகாண சபைத் தேர்தலுக்கு தனியான ஒரு கூட்டணியில் போட்டியிடுவதற்காக விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய தரப்பினர் எடுத்த முயற்சிக்கு மகிந்த ராஜபக்ச இணங்கவில்லை என்பதால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இறுதி காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி ஓய்வுபெறுவதற்கு மகிந்த ராஜபக்ச தயாராகி வருவதாகவும், மீண்டும் தேர்தல் மேடையில் ஏறுவதற்கு மகிந்த விரும்பவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கிவந்த அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் இதுகுறித்து எமக்கு கருத்து தெரிவிக்கும்போது, எந்தவொரு முன் ஆயத்தமும் இன்றியே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனியாக போட்டியிடுவதாக அறிவித்ததாகவும், தற்போது மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பாலானோர் மைத்திரிபால சிறிசுனவின் தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டார்.
உதய கம்மன்பில, விமல் வீரவங்ச உள்ளிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்த சிலர் மட்டும் தனியான ஒரு கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.