Breaking News

மஹிந்தவை காப்பாற்ற சில நாடுகள் தீவிர முயற்சி! - சுரேஸ் குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவினையும் இராணுவத்தினரையும் காப்பாற்றும் நோக்கில் துரித கதியில் சீனா , ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் கியூபா போன்ற சில நாடுகள் முயற்சித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.


அமெரிக்காவின் நகல் திட்ட வரைபின் ஆரம்ப நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுவிஸ் , ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா போன்ற நாடுகள் சர்வதேச விசாரணை ஒன்றிற்காக வலியுறுத்தி வருவதாகவும் அதற்காக தமது நன்றிகளையும் தெரிவித்தார்.

இலங்கைவாழ் தமிழ் மக்கள் , புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் மற்றும் தமிழகமும் சர்வதேச விசாரணை என்கின்ற நிலைப்பாட்டிலிருந்து சற்றும் மாறவில்லை என்றும் அவர்களது உறுதியான நிலைப்பாடு சர்வதேச விசாரணை என்பதே என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

இதேவேளை சர்வதேச விசாரணை ஒன்றிற்கான எதிர்பினை தென்னிலங்கை தெரிவித்துவரும் நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாத்திரமே சர்வதேச விசாரணை தொடர்பில் ஆதரவாக ஐநாவிற்கு ஆழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.