Breaking News

சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்க மாட்டோம் - ஜேவிபி எச்சரிக்கை

சர்வதேச விசாரணை என்கின்ற பெயரில் சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் பிரவேசிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே கட்சியின் பேச்சாளர் விஜித ஹேரத் இவ் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதேவேளை நாளை அமெரிக்கா சமர்பிக்கவுள்ள அறிக்கையினை எதிர்பதுடன் இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் அபகீர்தியை நிறுத்துமாறும் எச்சரித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த நிலையில் ஐநா செயலாளரின் இலங்கை விஜயம் அமைந்திருந்தபோது இன நல்லிணக்கம் மற்றும் இறுதி யுத்தம் தொடர்பில் ஆணைக்குழுக்களை அமைக்கவும் சுமூகமான தீர்வினை எட்டுவதற்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் அவற்றை ஏற்க மறுத்த மஹிந்த ராஜபக்ஸவினால்தான் இந்த நிலைமை தோன்றியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா கூறுவதைப்போன்று சர்வதேச விசாரணை ஒன்றினுாடாக நமது பிரச்சனைகளை வெளியுலகிற்கு கொண்டுசெல்லாது நமது பிரச்சனையை நாமே முடிவிற்கு கொண்டுவரும் வகையில் உள்ளக விசாரணையை தாம் ஆதரிப்பதாக தெரிவித்தார்.