Breaking News

சர்வதேச திரைப்பட விழா யாழ். பல்கலையில் இன்று ஆரம்பம்

சர்­வ­தேச திரைப்­பட விழா இன்று செவ்வாய்க்­கி­ழமை மாலை 5.30 மணிக்கு யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக கைலா­ச­பதி கலை­ய­ரங்கில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதனைத் தொடர்ந்து எதிர்­வரும் 21 திகதி வரை குறித்த நிகழ்வு நடை­பெ­ற­வுள்­ளது.

குறித்த நிகழ்வை சர்­வ­தேச நாடு­களின் திரைப்­ப­டத்­து­றையைச் சார்ந்த ஏழு கலை ஆளு­மைகள் தொடக்கி வைக்­க­வுள்­ளனர். அதனைத் தொடர்ந்து வட மாகா­ண­சபை முத­ல­மைச்சர் சி.வி. விக்கி­னேஸ்­வரன் விழாவின் ஆரம்ப உரையை நிகழ்த்­த­வுள்ளார்.

தொடர்ந்து இசைஞர் காயத்ரீ ஹேம­தா­ஸவின் ‘இசைச் சமர்ப்­பணம்’ என்ற இசை நிகழ்ச்­சியும் அவ­ரது தந்­தை­யா­ரான இசைச் சக்­க­ர­வர்த்தி பிரே­ம­சிறி ஹேம­தாஸவை நினை­வு­கூரல் நிகழ்வும் இடம்­பெ­ற­வுள்­ளது.

இன்­றைய தினம் ‘யூரோப்­பியன் பனோ­ர­மாவின்’ ஆரம்ப திரைப்­ப­ட­மாக PHOENIX 98 (2014) என்ற ஜேர்­ம­னிய திரைப்­படம் திரை­யி­டப்­ப­டு­கி­றது.

தொடர்ச்­சி­யாக எதிர்­வரும் நாட்­களில் இலங்கை, இந்­தியா மற்றும் சர்­வ­தேச நாடுகளின் சுமார் 50 வரை­யான கதைப் படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் குறுந்திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக விழா ஏற்பாட்டுக் குழு-வினர் அறிவித்துள்ளனர்.