Breaking News

காணாமல்போனோரின் உறவுகளின் முறைப்பாடுகள் புறந்தள்ளப்பட்டுள்ளன ; சந்தியா எக்னலிகொட

2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வழங்க பலருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியார் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். யுத்தம் நிறைவுற்ற 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் பலர் காணாமல் போயிருப்பதாக குறிப்பிட்ட அவர்,

இது தொடர்பில் வாய்மொழி மூலமோ அல்லது எழுத்து மூலமோ ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இதேவேளை தனது கணவர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நேரடி தொடர்பிருப்பதாக சந்தியா எக்னலிகொட மீண்டும் குற்றம் சாட்டினார்.

காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டதோடு, அதன் விசாரணைக்ள தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.