Breaking News

இலங்கைக்கு உதவித்திட்டங்களை வழங்க தயார்! ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் இடம்பெறும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்க தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையில் சிறந்த ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதே தமது நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சில சிவில் அமைப்புக்களுக்கு பெறுமதிமிக்க பொருட்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

108,000 யூரோ பெறுமதியான மடிக்கனிணிகள் மற்றும் தொலைபேசிகள் உட்பட பல அலுவலக உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

தேர்தல் காலத்தின் போது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை செய்துள்ளதாக ஐரோப்பிய தேர்தல் சங்க உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.இதன் ஒரு கட்டமாக வாக்காளர்களை பதிவு செய்வதற்கு 1.2 மில்லியன் யூரோ நிதி வழங்கியதாகவும் அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிவில் அமைப்புக்களுக்கு அலுவலக உபகரணங்கள் வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.