Breaking News

ஜெனீவா விவகாரம் தொடர்பில் போலிப் பிரச்சாரம் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை

ஜெனீவா விவகாரம் தொடர்பில் போலிப் பிரச்சாரம் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரம் செய்கின்றனர். அவ்வாறு மக்களை பிழையாக வழி நடத்தும் தரப்புக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை தொடர்பில் சிலர் பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர்.அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமையுண்டு.

எனினும் திட்டமிட்ட வகையில் போலிப் பிரச்சாரம் செய்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குழப்ப மேற்கொள்ளும் சூழ்ச்சித் திட்டங்களை அனுமதிக்க முடியாது.இவ்வாறு சூழ்ச்சி செய்வோர் குறித்து அரசாங்கம் கண்காணித்து வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.