தகுதி அடிப்படையில் சம்பந்தனுக்கு பதவி வழங்கியிருந்தால் தவறில்லை: சோபித தேரர்
தகுதி அடிப்படையில் சம்பந்தனுக்கு பதவி வழங்கியிருந்தால் தவறில்லை என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இன, மத பேதங்களை கருத்திற் கொள்ள வேண்டிய அவசியமில்லை.குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் ஒரு விடயத்தை பார்ப்பதனால் ஏற்படும் விளைவுகளும் குறுகியதேயாகும்.
திறந்த மனதுடன் ஆக்கபூர்வமாக விடயங்களை நோக்க வேண்டியது அவசியமானது என சோபித தேரர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.








