அரசின் செயற்பாடு போதாது -அமெரிக்க பிரதிநிதிகளிடம் முதல்வர் குற்றச்சாட்டு(காணொளி)
னைவரியில் ஆட்சி மாறியுள்ளபோதும் இன்றுவரை தமிழ் மக்களைப்பொறுத்தவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என வடக்கிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க செனட் பிரதிநிதிகளிடம் வடக்கின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
வடக்கு முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனிடம் தற்போதைய நிலவரம் தொடர்பாக கலந்துரையாட வந்திருந்த அமெரிக்க பிரதிநிதிகளிடம் வடக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முதலமைச்சர் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
அதன்போது அரசின் அசமந்த போக்கை சுட்டிகாட்டிய முதல்வர் 64ஆயிரம் ஏக்கர் காணிகளில் 1000 ஏக்கர் காணியை விடுவித்துவிட்டு அரசு பிரச்சாரம் செய்வதாகவும் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பதிவுகள் கெடுபிடிகள் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டியிருப்பதாக முதலமைச்சர் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.