Breaking News

இரு பிரம்மாண்ட அரங்குகள் கபாலிக்காக!

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்கும் கபாலி படத்தை பா. இரஞ்சித் இயக்க இதன் முதல் கட்டப் படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக இரண்டு பிரம்மாண்டமான அரங்குகள் சென்னையின் இரு வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவிலும், பனையூரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவிலும் தான் நடைபெறுகின்றன. ஈவிபி ஸ்டுடியோவில் மாஸ், தூங்காவனம் போன்ற படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஆதித்யராம் ஸ்டுடியோவில் புலிபடத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இப்போது அந்த இரண்டு ஸ்டுடியோக்களில் தான் கபாலி படத்திற்கான பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.