ஈழத்தமிழர் ஒருவர் தமிழகத்தில் உயிரிழப்பு
சென்னையில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை பள்ளிகாரனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த இலங்கையர் நேற்று உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
போலி கடவுச்சீட்டு அச்சிடுவது சம்பந்தமாக சென்னை மத்திய குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் பாதுகாப்பில் இருந்த நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இலங்கையர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது மனைவி பிள்ளைகள் சகதிம் இந்தியாவில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.