அத்துருகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு
இன்று அதிகாலை முச்சக்கரவண்டியொன்று குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு செலுத்தப்பட்டபோது பஸ் ஒன்றுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரே உயிரிழந்துள்ளனர்.
மற்றுமொருவர் காயமடைந்து தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.








