Breaking News

விசாரணை அறிக்கைக்கு உரிய பதில் அளிக்கப்படும்! ஆணையாளரிடம் இலங்கை உறுதி

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால் வெளியிடப் படவுள்ள விசாரணை அறிக்கைக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் ஆணையாளருக்கு உறுதியளித்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை நாளை புதன்கிழமை ஜெனீவாவில் வெளியிடப்படவுள்ளது.குறித்த அறிக்கையின் பிரதி கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த அறிக்கைக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் தன்னிடம் உறுதியளித்ததாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைனின் பேச்சாளர் ரவினா சம்தசனி ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பில் நாளை வெளிவரவிருக்கும் விசாரணை அறிக்கை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்திலும் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை மிகவும் பாரதூரமானதாக அமையும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.