சுதந்திரமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள அழுத்தம் கொடுப்போம் : கனடா
சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் இலங்கையர்களுக்கு, தொடர்ந்தும் கனடிய நாடு பலமான ஆதரவை வழங்க, கொன்சவேட்டிவ் அரசு துணைநிற்கும் என கனடா அமைச்சர் றொப் நிக்கல்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்.
தெரிவு செய்யப்படும் கொன்சவேட்டிவ் அரசானது, பாகுபாடற்ற, நீதியும் சுதந்திரமும் கொண்ட சர்வதேச செயற்பாடுகளை, இலங்கை மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் முன்னெடுக்க அனைத்துலக ரீதியில் முயற்சியும் முதலீடும் செய்யும் என்றார். இலங்கையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ள அழுத்தத்தைக் கொடுப்பதுடன், அங்கு நீதியைமுன்னெடுக்கவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அனைத்துலக நாடுகளுடன் இணைந்து பாடுபடும்.
இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீண்டும் உரியவர்களுக்கே ஒப்படைக்கவும், இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்று வாழவும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விதவைகளுக்கும் புனர்வாழ்வு மற்றும் உதவிகளை வழங்கவும், அவசிய உதவிகள் தேவைப்படும் சமூகங்களுக்குத் துணை செய்யவும், மீண்டும் தெரிவு செய்யப்படும் கொன்சவேட்டிவ் அரசு அயராது பாடுபடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.








