Breaking News

கனடா பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி பாரிய வெற்றி

கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி பாரிய வெற்றிபெற்றுள்ளது.

இதுவரை வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி கனடாவின் முன்னாள் பிரதமர் மறைந்த பியெர் ட்ருதாவின் மகனான ஜஸ்டின் ட்ருதா தலைமையிலான லிபரல் கட்சி 188 தேர்தல் மாவட்டங்களில் முன்னிலையில் இருக்கிறது. 

இதேவேளை தற்போதைய கனேடியப் பிரதமரான ஸ்டீஃபன் ஹார்ப்பர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 107 மாவட்டங்களில் முன்னிலையில் இருக்கிறது. கனடாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க, 338 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 170 இடங்களைப் பிடிக்க வேண்டும். 

இதன் மூலம் 9 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி அங்கு முடிவுக்குவந்துள்ளதுடன், ஜஸ்டின் ட்ருதா தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியமைக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளது.