Breaking News

போர்க் குற்றவாளிகளுக்காக கருணைச் சபை

ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தரப்புக்களுக்காக கருணைச் சபையொன்று உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் முக்கிய மதகுருமார்களை உள்ளடக்கி இந்த கருணைச் சபை உருவாக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் படையினருக்கு மன்னிப்பு வழங்குவதே இந்த கருணைச் சபை உருவாக்கப்படுவதன் நோக்கமாகும். 

இவ்வாறான ஒரு செயற்பாடு தென்னாபிரிக்காவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் படையினருக்கான சட்ட உதவிகளை செய்து கொடுக்கவும் அரசாங்கம் தனியான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.