ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்
ஊடகவியலாளர் மயில்வாகம் நிமலராஜன் கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை புதிய அரசாங்கம் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைகளைப் போன்றே தமது மகனின் கொலை குறித்தும் விசாரணை நடத்தும் என எதிர்பார்ப்பதாக நிமலராஜனின் தந்தை தெரிவித்துள்ளார்.
இற்றைக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக ஊடகவியலாளர் நிமராஜன் கொலை செய்யப்பட்டிருந்தார்.மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாள் தோறும் நினைவிற்கு வருவதாக 81 வயதான நிமலராஜனின் தந்தை மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் வசித்து வரும் மயில்வாகனம், பி.பி.சீ சேவைக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.புதிய அரசாங்கம் தமது மகனின் கொலை குறித்து விசாரணை நடத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.








