Breaking News

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

யாழ்.குடாநாட்டில் ஊடகப் பணியின் போது துணை ஆயுத குழுக்களினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 15வது ஆண்டு நினைவு நாள் யாழ்.ஊடக அமையத்தில் நினைவு கூறப்பட்டது. 

நேற்று மாலை 5 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர் நிமலராஜனுடன் பணியாற்றிய சக ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ஊடகவியலாளர் நிமலராஜன் நினைவுரையினை மூத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன் நிகழ்த்தினார்.