கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு!
கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட, பிள்ளையானின் முன்னாள் கூட்டாளிகளான பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகியோரை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
கடந்த 11ஆம் நாள் கைது செய்யப்பட்ட பிள்ளையானையும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர். தற்போது பிள்ளையானை அடுத்த மாதம் 04ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிக்க, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இந்த நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.








