எக்னெலிகொட கொலை செய்யப்பட்டு வெலிகந்தையில் புதைக்கப்பட்டாரா?
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட கொலை செய்யப்பட்டு வெலிகந்தையில் புதைக்கப்பட்டாரா சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எக்னெலிகொடவை கொலை செய்து வெலிகந்தைப் பிரதேசத்தில் புதைத்து விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்ட எக்னெலிகொட, முதலில் கிரித்தலே முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து பின்னர் வெலிகந்த முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளன.








