Breaking News

தேசிய நல்லிணக்க அமைப்புக்கு சந்திரிக்கா தலைவராக தகுதியில்லை - கூட்டமைப்பு எதிர்ப்பு

தேசிய நல்லிணக்க அமைப்புக்கு தலைமைப் பதவியை வகிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு எந்த தகுதியும் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வட மாகாண சபையின் 36 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் பிரவுஸ் சிராய்வா இதனைத் தெரிவித்துள்ளதாக இன்றைய சிங்கள நாளேடு ஒன்று அறிவித்துள்ளது.

தேசிய நல்லிணக்க தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வட பகுதிக்கு வர வேண்டியதில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

இவருடைய ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சராக அனுருத்த ரத்வத்தையை வைத்துக் கொண்டு செய்த மிலேச்சத்தனங்களை தாம் நன்கு அறிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த அமைப்புக்கு தலைமைப் பதவி வகிப்பதை கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.