இறுதி போரின்போது 40000ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படவில்லை - சமரசிங்க நிராகரிப்பு
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தொடர்ந்தும் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் 40000ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுவதையும் நிராகரித்துள்ளார்.
ஜெனீவா ஒரு அரசியல் அமைப்பு எனவும் தொழிற்பயிற்சி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் ஐக்கியநாடுகள் பேச்சாளராக செயற்பட்டகோர்டன் வெய்ஸ் 40000ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக பொய்யொன்றை பரப்பினார்.
அதனை ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவும் கருத்திலெடுத்தது என குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளிற்கு எதிரான யுத்தத்திற்கு அவசியமான புலனாய்வு தகவல்களை அமெரிக்கா வழங்கியது, இந்தியாவும் அதற்கு ஆதரவுவழங்கியது, எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








