Breaking News

வெளிநாட்டு பங்களிப்பை வலியுறுத்தும் பிரேரணை

இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பான உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றை­மையில் வெளி­நாட்டு நீதிவான்கள், விசா­ர­ணையாளர்கள் மற்றும் சட்­டத்­த­ர­ணி­களின் பங்­க­ளிப்­பினை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­ற­ப­பட்­டுள்ள பிரே­ரணை வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக அமெ­ரிக்க இராஜாங்கத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள பிரே­ர­ணை­யா­னது இலங்­கையின் முயற்­சி­களை பறை­சாற்­று­வ­தாக அமெ­ரிக்க ராஜாங்கத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இலங்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் கடந்த முதலாம் திகதி நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை தொடர்பில் இரா­ஜாங்க திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள பிரே­ர­ணை­யா­னது இலங்­கையின் முயற்­சி­களை பறை­சாற்­று­கின்­றது. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்தல் மற்றும் மனித உரி­மை­களை மேம்­ப­டுத்தல் தொடர்பில் புதிய அர­சாங்கம் கரி­சனை காட்டி வரு­கின்­றது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்கா தொடர்ச்­சி­யாக சிறந்த பங்­க­ளிப்­பினை வழங்கும். அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­க­ளினால் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்­பட்ட தீர்­மானம், உள்­நாட்டு சட்­டங்­களில் செய்­யப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பா­கவும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

சிவில் யுத்­தத்தில் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­வர்­களை தண்­டிக்கும் வகையில் சட்­டங்­களில் திருத்தம் செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் பிரே­ரணை வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அது மட்­டு­மன்றி மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றை­மையில் வெளி­நாட்டு நீத­வான்கள், விசா­ர­ணைகள் மற்றும் சட்­டத்­த­ர­ணி­களின் பங்­க­ளிப்­பினை பிரே­ரணை வலி­யு­றுத்­தி­யுள்­ளது என்று அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த முதலாம் திகதி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையில் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் சட்டத்தரணிகள் விசாரணையாளர்களைக்கொண்டு இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேச்சுநடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.