Breaking News

வருடத்தில் 600-1000 இடைப்பட்ட சிறுவர்கள் விபத்தில் மரணம்

ஒரு வருடத்தில் இலங்கையில் 600 இற்கும் 1000 இற்கும் இடைப்பட்ட சிறுவர்கள் விபத்துக்களில் மரணமடைவதாக புதிய ஆய்வுகள் தெரிவிப்பதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் கவனயீனமே இவ்விபத்துக்களுக்கு பிரதானமான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோர் பிள்ளைகளுக்க அன்பு காட்டுவது போலவே அவர்களது பாதுகாப்பிலும் கவனம் செலுத்துமாக இருந்தால் இவ்விபத்துக்களைக் குறைக்கலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.