விசாரணையை எதிர்கொள்ளவேண்டிய நிலை படையினருக்கு ஏற்படாது : மங்கள
யுத்தக் குற்றம் குறித்த விசாரணையை எதிர்கொள்ளவேண்டிய நிலை, இலங்கை படையினருக்கு ஏற்படாதென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் உருவாக்கவுள்ள விசாரணை பொறிமுறையானது நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளதால், இதற்க அதிக வாய்ப்பு காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஐ.நா விசாரணை குறித்து ஆங்கில நாளிதழொன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
யுத்தக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதலில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் மதத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்றினால் அதுகுறித்து விசாரிக்கப்படுமென தெரிவித்த அமைச்சர், இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படலாமெனவும் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்ற விசாரணை பொறிமுறையை நிறுவுவது குறித்து தற்போது பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இதுகுறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.








