அமைச்சுக்களை முகாமை செய்ய கண்காணிப்பு குழுக்கள்
அரசாங்கத்தில் தற்போது காணப்படும் 50 அமைச்சுக்களினதும் முகாமைத்துவ பொறுப்பு, கண்காணிப்புக் குழுக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதற்கமைய 16 கண்காணிப்புக் குழுக்களை புதிதாக நிறுவுவதென, அண்மையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் நடவடிக்கைகளை முழு அளவில் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பதற்காகவும் நம்பகத்தன்மையை பேணுவதற்காகவும் அமைக்கப்படவுள்ள இக் குழுக்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவுள்ள அதேவேளை, குழுக்களின் ஆலோசகர்களாக புத்திஜீவிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள இக்குழுக்களுக்கு, நாடாளுமன்ற செயற்குழுக்களை விட கூடுதல் அதிகாரம் வழங்கப்படவுள்ளது.








