பாராளுமன்றத்தில் உயர் செயற்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு
பாராளுமன்றத்தில் உயர் பதவிகள் தொடர்பான செயற்குழு உறுப்பினர்களை சபாநாயகர் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதன்படி, பாராளுமன்றத்தில் உயர் செயற்குழு உறுப்பினர்களாக, சபா நாயகர் கரு ஜயசூரிய தலைமையில், ஜோன் அமரதுங்க, நிமல் சிறிபால டி சில்வா, ரவுப் ஹக்கீம், லக்ஷ்மன் கிரியெல்ல, விஜேதாச ராஜபக்ஷ, மனோ கணேஷன், சரத் அமுனுகம, தினேஷ் குணவர்தன, விஜித ஹேரத், பிமல் ரத்னாயக்க, மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் நேற்று வெளியிட்ட விசேட அறிக்கையொன்றில் இந்தப் பெயர்களை அறிவித்துள்ளார்.








