யுத்த குற்றச் செயல்கள் புரிந்த புலிகளுக்கு 7 நாடுகள் புகலிடம்
இலங்கையில் யுத்த குற்றச் செயலுடன் தொடர்புடைய புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் 200 இற்கும் அதிகமானோருக்கு ஏழு நாடுகளில் அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோர்வே, கனடா, பிரிட்டன், ஜேர்மன், பிரான்ஸ், சுவீடன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் இவ்வாறு புகலிடம் வழங்கியுள்ள நாடுகளின் முக்கியமானவை.
இவ்வாறு புகலிடம் வழங்கியுள்ளதனால், யுத்த குற்றச் செயல்கள் புரிந்த புலிகளுக்கு எதிராகவும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட இடமளிக்க வேண்டும் என்ற ஜெனீவா விசாரணைக்குழுவின் பிரேரணையை செயற்படுத்த முடியாமல் போயுள்ளது என சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.








