Breaking News

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு முழுமையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

பெருவில் நடைபெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டின் போது, குறித்த நிறுவனங்களின் பிரதானிகளினால் இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டின் போது, இவ்விரு நிறுவனங்களின் பிரதானிகளையும், நிதி அமைச்சர் ரவி கருணாயக்க சந்தித்த போது இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கைக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை அதிகரிக்கவும் உலக வங்கியின் பிரதிநிதிகள் இணங்கியதாக நிதி அமைச்சு குறிப்பிடுகின்றது.