சிரியாவில் ஐ.எஸ் நிலைகள் மீது ரஷ்யா தாக்குதல்: 300 தீவிரவாதிகள் பலி
சிரிய ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்க்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் 60 நிலைகள் அழிக்கப்ப ட்டுள்ளதாகவும், 300 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, தினமும் 10 ஐ.எஸ். நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா கூறியிருந்த நிலையில், தற்போது தாக்குதலை தீவிரபடுத்தியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகாளக, பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது.
இதனையடுத்து, சிரியா மற்றும் ஈராக்கில் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பல அட்டுழியங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதற்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழிதாக்குல் நடத்தி வருகின்றது.
இருப்பினும், அமெரிக்க கூட்டுப் படைகளுடன் சேராமல் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்க்கு ஆதாராவாக ரஷ்யா தனியாக தாக்குதலை தொடங்கியுள்ளது.








