உள்நாட்டு விசாரணையில் புலம் பெயர்ந்தோரின் சாட்சியம் குறித்து சுரேஷ் கேள்வி
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க தீர்மானத்திற்கு அமைய உள்ளக பொறிமுறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்தவர்களின் சாட்சியம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெனிவா மனித உரிமை அமர்வில் கலந்து கொண்டு நாடுதிரும்பிய அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், ஐ.நா விசாரணைக்குழு நடத்திய விசாரணைகளின் போது, இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து மூவாயிரத்திற்கும் மேற்பட்டடோர் வெளிநாடுகளில் சாட்சியமளித்துள்ளதாகவும், அந்த விசாரணை மீண்டும் உள்ளகப் பொறிமுறையின் கீழ் நடத்தப்படும் பட்சத்தில் அவர்களின் சாட்சியங்கள் எவ்வாறு பெற்றுக் கொள்ளபடும் என்றும் கேள்வி எழுப்பினார்.








