Breaking News

“தனக்கு ஒரு வாகனம் போதும்” – சம்பந்தன்

எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஆர். சம்பந்தன் தனக்கு ஒரு வாகனம் போதும் என கூறி பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட 6 வாகனங்களில் ஒன்றை பெற்றுக்கொண்டு ஏனைய வாகனங்களை பாராளுமன்றத்திற்கே திருப்பி கையளித்துள்ளதாக தெரியவருகிறது.

எதிர்க்கட்சி தலைவர் ஒருவருக்கு 6 வாகனங்கள் பெற்றுக்கொள்ளமுடியும் என அதிகாரிகள் கூறியதும், அவ்வளவு வாகனங்கள் எதற்கு என ஆச்சரியமாக வினவிய எதிர்க்கட்சி தலைவர், அவற்றை மீண்டும் பாராளுமன்றத்திடமே ஒப்படைத்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிகின்றன.

அதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி காரியாலயத்திற்கு எந்தவித புதிய நியமனங்களையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.