நாட்டிலுள்ள 37 வகையான குடிநீர் உற்பத்திகள் தரமற்றவை
இலங்கையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் 37 வகையான உற்பத்திகள் உரிய தரத்தில் அமையாதவை என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
நாட்டில் விநியோகிக்கப்படும் குடிநீர் போத்தல்களின் மாதிரிகள் அரச இரசாயனப் பரிசோதனை நிலையம், வைத்திய பரிசோதனை நிலையம், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதில் 37 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் குடிநீர் போத்தல்கள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டதாகவும் சபையின் பிரதிப் பணிப்பாளர் சமந்த கருணாரத்ன மேலும் அறிவித்துள்ளார்








