வெளிவிவகார அமைச்சில் பல பாரிய மாற்றங்கள் ?
புதிய கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சில் பாரிய மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் ஆலோசனை நடத்திவிட்டு வெளிவிவகார அமைச்சில் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் வெளிவிவகார அமைச்சின் சில உயர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அரசாங்கத்தின் புதிய பொருளாதார கொள்கைகள் தொடர்பில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் பாரிய பங்களிப்பை செய்ய வேண்டும் என பிரதமர் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிய முடிகின்றது.
அதன்படி விரைவில் வெளிவிவகார அமைச்சின் பல்வேறு பதவிகளில் மாற்றங்கள் வரலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.








