Breaking News

அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு கோரி வெள்­ளி­யன்று நல்­லூரில் போராட்டம்

நீண்­ட­கா­ல­மாக சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு கோரி எதிர்­வரும் வெள்ளியன்று யாழ்ப்­பாணம் நல்­லூரில் பாரிய கவ­ன­யீர்ப்புப் போராட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

சிவில் அமைப்­புக்கள் ஏற்­பாடு செய்­துள்ள இப்­போராட்­டத்தில் அர­சியல் கைதி­களின் உற­வி­னர்கள், அர­சியல் பிர­தி­நி­திகள், சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள், மத­கு­ரு­மார்கள் உட்­பட பல்­வேறு தரப்­பி­னரும் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டையில் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம், அவ­ச­ர­காலச் சட்டம் ஆகி­ய­வற்றின் கீழ் கைது செய்­யப்­பட்டு நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணை­யின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் இன்று முதல் கால­வ­ரை­யறையற்ற உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பிக்கவுள்ளனர்.

இந்­நி­லையில் அவர்­களின் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­திற்கு மேலும் வலுச்­சேர்க்கும் வகை­யி­லேயே இப்­பா­ரிய கவ­ன­யீர்ப்பு போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது அர­சியல் கைதி­களின் கோரிக்­கைக்கு நியா­ய­மான தீர்வு வழங்கப்படவேண்டும் , பொது மன்னிப்பளித்து அவர்கள் உடன் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது வலுவாக வலியுறுத்தப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.