Breaking News

அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு முடியும்: விஜயதாஸ மோசடிக்காரர்

விஜயதாஸ ராஜபக்ஷ என்பவர் திருடன் மற்றும் மோசடிக்காரன் என தான் பயமின்றி தொடர்ந்தும் சொல்வதாக பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

அவர் (விஜயதாஸ ராஜபக்ஷ) எவன்காட் சம்பவத்தின் மூலம் இலஞ்சம் பெற்றதாக தான் முன்னரும் கண்டியில் ஒரு மேடையில் குறிப்பிட்டதாக பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவங்களின் பின்னணியில் அமைச்சர் விஜித அபேவர்த்தன உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை தீபாவளி பண்டிகைக் காலத்தில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு அவ்வாறு விடுவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். தன்னை விடுவித்ததும் அவ்வாறே என அவர் சுட்டிக்காட்டினார்.