Breaking News

தமிழ்மக்கள் பேரவை ஏன் முதலமைச்சர் விளக்கம்(காணொளி இணைப்பு)

எதிர்கால தமிழர் அரசியல் நடவடிக்கைகளை கருத்தில்
கொண்டு தமிழ் அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் இணைந்து தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பை இன்று யாழில் ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் இணைத்தலைவர்களில் முதல்வராக திகழ்ந்திருந்தார்

அரசியல் கட்சியின் பிரமுகர்களும் வடமாமாகாண முதலமைச்சரும் மதத் தலைவர்களும் பேராசிரியர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் முதற்கட்ட கலந்துரையாடலும் விளக்கமுமே இன்று இடம்பெற்றுள்ளது இதன் தொடர்ச்சியாக அடுத்த 27ஆம் திகதி அடுத்த கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் தமிழ் கிங்டத்திற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சரின் உரை

இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட கௌரவ முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதும் கட்டாயமாக கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தின் பயனாக வந்திருப்பதாக ஆரம்பித்த அவரது உரை தான் இணைத்தலமையில் இணைந்தது மகிழ்வை தருவதாகவும் தனிமனித முடிவுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த தமிழர்களின் நலன்களில் அடிப்படையில் முடிவுகள் எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் மேலும் தனது உரையில் தான் வடமாகாண சபை நிர்வாக எல்லையை தாண்டி செயற்படுவதாக குற்றச்சாட்டப்பட்டிருப்பதாகவும் ஆனால் வடமாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி தான் செயற்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தமிழ் மக்களின் நலன் கருதி சகலவிடயங்களும் கரிசனைக்கு எடுக்க வேண்டிய தேவை தனக்கு இருப்பதாகவும் தனதுரையில் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துதெரிவித்த அவர் தனதுரையில் தாம் யாரையும் புறம்தள்ளி செயற்பட விரும்பவில்லை என்றும் எல்லோரும் ஒற்றுமையாக கட்சி செயற்பாடுகளை கடந்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்யும் முகமாகவே இந்த தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் அந்த உத்தரவாதம் தரப்பட்டமையாலேயே தான் இதில் கலந்துகொண்டதாகவும் மேலும் தெரிவித்தார்.

பேரவையின் ஊடக அறிக்கைக்கு இங்கே அழுத்தவும்

இந்த கலந்துரையாடலை தெடர்ந்து சகல மட்டங்களிலும் தமிழ்ப் பிரதேசங்கள் யாவிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும் எனவும் தெரிவித்தார்.