Breaking News

இராணுவ வசமுள்ள காணிகள் ஜனவரியில் மீளக்கையளிப்பு - சபையில் பிர­தமர் தெரி­விப்பு

அடுத்த வருடம் ஜன­வரி மாதத்தில் வடக்கில் இரா­ணுவம் கைப்­பற்­றி­யுள்ள பெரும்­பா­லான காணிகள் மக்­க­ளுக்கு மீளக்­கை­ய­ளிக்­கப்­படும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்­ளது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தெரிவித்தார்.

கடந்த ஆட்­சியில் இரத்­துச்­செய்­யப்­பட்ட அமெ­ரிக்­காவின் மில்­லே­னியம் சவால் நிதியை மீண்டும் இலங்­கைக்கு வழங்க அமெ­ரிக்கா முன்­வந்­துள்­ளது என்றும் அவர் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை இடம்­பெற்ற தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்சு சர்­வ­தேச வர்த்­தக அமைச்சு மற்றும் நிதி அமைச்சு மீதான வரவு –செலவு திட்­டத்தின் இரண்டாம் குழு நிலை விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்றும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், வடக்கு கிழக்கு மக்கள் வாழ்ந்த காணி­களை மீண்டும் அம் மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட வட­ப­குதி மக்­களின் காணிகள் பெரும்­பா­லானவை அடுத்த வருடம் ஜன­வ­ரியில் மீளக்­கை­ய­ளிக்­கப்­படும். 

இவ்­வி­டயம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மற்றும் அமைச்சர் சுவா­மி­நா­த­னுக்­கி­டையில் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. ஜன­வ­ரியில் காணிகள் மீளக்­கை­ய­ளிக்­கப்­படும் அதே­வேளை, வடக்கு கிழக்கில் தொடர்­பு­பட்ட பிர­தேச செய­லாளர் பிரி­வுகள் அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.

விசே­ட­மாக வடக்கு, கிழக்கில் பொரு­ளா­தாரம் வீழ்ச்சி கண்­டுள்­ளது. அதனை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். அப்­பி­ர­தே­சங்­களில் சுற்­று­லாத்­து­றையை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கும் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக்க பல கட்­சிகள், சிவில் அமைப்­புக்கள் உட்­பட பலர் ஆத­ரவு வழங்­கினர். எனவே, தற்­போது இரண்டு பிர­தான கட்­சி­களாலும் இணைந்து ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இணக்­கப்­பாட்டு தேசிய அரசின் வரவு செலவு திட்டம்

முன்­வைக்­கப்­பட்டு குழு நிலை விவா­தத்தின் போது எதிர்க்­கட்­சிகள் வரவு செலவு திட்­டத்தில் உள்­ள­டக்­கு­வ­தற்­கான பல யோச­னை­க­ளையும் திருத்­தங்­க­ளையும் முன் வைத்­தனர்.

அதே­வேளை, தேசிய அரசில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் அமைச்­சர்கள், எம்­பிக்கள் என்னை சந்­தித்­தார்கள். இதன்­போது அவர்கள் பல யோச­னை­களை முன்­வைத்­தார்கள். திருத்­தங்­களை முன்­வைத்­தார்கள். அத்­தோடு தனியார் வங்­கி­களின் பிர­தி­நி­திகள் அரச வங்­கி­களின் தலை­வர்கள் மற்றும் வங்கி தொழிற்­சங்­கங்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன.

இதன்­போது பல யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன. அவை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது தொடர்பில் கவனம் செலுத்­தப்­படும்.

அவ்­வாறு பல்­வேறு திருத்­தங்கள் யோச­னைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தனால் வரு­மானம் குறைந்து செலவு அதி­க­ரிக்கும்.எனவே ஜன­வ­ரியில் பொரு­ளா­தார குழு கூடி இவ்­வி­ட­யத்தை ஆராயும்.

அத்­தோடு புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்­பிலும் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. நாட்டில் தற்­போது வாகன நெரிசல் அதி­க­ரித்­துள்­ளது. கொழும்­பி­லி­ருந்து பாரா­ளு­மன்றம் வரத் தாம­த­மா­கின்­றது. அதனை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போனால் அனை­வ­ருக்கும் ஹெலி­கொப்டர் வழங்க வேண்­டிய நிலையே உரு­வாகும். அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் ஒரு சிலரோ அர­சுக்கு எதி­ராக கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றனர்.

இதே­வேளை, அமெ­ரிக்­காவின் மில்­லே­னியம் சவால் நிதி­யத்தின் மூலம் எமது நாட்­டுக்கு 800 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் உதவி கிடைக்­கப்­பெற்­றது.

ஆனால் கடந்த மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் இவ்­வு­தவி கிடைக்­காமல் போனது. தற்­போது மீண்டும் எமது நாட்டில் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்விடயத்தில் அமெரிக்காவுக்கு தெளிவு ஏற்பட்டுள்ளது. எனவே எமக்கு மீண்டும் அமெரிக்காவின் நிதி கிடைத்துள்ளது. இதன்மூலம் உயர்கல்வி அபிவிருத்திக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பல்கலைக்கழகங்களின் தரமுயர்த்த திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.