Breaking News

புலி­களை விடு­விப்­பதுதான் அர­சாங்­கத்தின் இலக்கு - சாடு­கிறார் மஹிந்த

இரண்டு மாறு­பட்ட கொள்­கை­யுள்ள கட்­சி­க­ளினால் ஒன்­றி­ணைந்து நாட்டை சரி­யான பாதையில் முன்­னெ­டுக்க முடி­யாது. இரண்டு தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து நாட்டை வழி­ந­டத்­தவும் முடி­யாது. ஆகவே நாட்டின் தலைவர் ஒரு­வ­ராக மட்­டுமே இருக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

விடு­தலை புலி­களை விடு­தலை செய்­வதும் எமது இரா­ணு­வத்தை தண்­டிப்­ப­துமே இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தேவை. அதற்கு ஜனா­தி­ப­தியும் சிறந்த எடுத்­துக்­காட்டு எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பிலும், விடு­த­லைப்­பு­லி­களின் உறுப்­பினர் சிவ­ராஜா ஜெனீப­னுக்கு ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்­கி­யமை தொடர்­பிலும் தனது கருத்தை தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறி­கையில்,

இன்று ஏற்­பட்­டுள்ள மாற்றம் எதிர்க்­கட்சி ஒன்று நாட்டில் செயற்­படக் கூடாது என்ற ஒரே நோக்­கத்தை அடிப்­ப­டையில் வைத்தே அமைந்­துள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் உள்ள அனைத்து கட்­சி­க­ளுமே ஆளும் கட்­சிக்­காக மாறி­யுள்ள நிலையில் கட்­டா­ய­மான எதிர்க்­கட்சி ஒன்று தேவைப்­ப­டு­கின்­றது. ஆனால் அவ்­வா­றான ஒரு நிலைமை இல்­லாது அர­சாங்­கத்தின் அனைத்து குற்­றங்­க­ளுக்கும் துணை­போகும் வகையில் எதிர்க்­கட்­சிகள் செயற்­பட்டு வரு­கின்­றது.

ஆகவே மக்கள் இன்று சலிப்பில் உள்­ளனர். அதேபோல் இன்று நாட்டில் அழுத்தம் கொடுத்து நாட்டை சரி­யான பாதியில் கொண்டு செல்லும் கட்சி ஒன்றை மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.

அதேபோல் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி நாட்டை சரி­யான திசையில் வழி­ந­டத்தி சென்­றது. இப்­போதும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியால் மட்­டுமே நாட்டை பாது­காக்­கவும் காப்­பாற்­றவும் முடியும். ஆனால் கட்­சியில் கொள்­கை­யையும், தனித்­து­வத்­தையும் அழிக்கும் வகையில் ஒரு­சிலர் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

அதேபோல் நாட்டை வழி­ந­டத்த வேண்­டு­மாயின் ஒரு தலை­மையில் கீழேயே அது சாத்­தி­ய­மாகும். இரண்டு தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து நாட்டை வழி­ந­டத்த முடி­யாது. இரண்டு மாறு­பட்ட கொள்­கை­யுள்ள கட்­சி­க­ளினால் ஒன்­றி­ணைந்து நாட்டை சரி­யான பாதையில் வழி­ந­டத்த முடி­யாது. ஆகவே நாட்டின் தலைவர் ஒரு­வ­ராக மட்­டுமே இருக்க முடியும். அதற்­கான மாற்­றத்தை மக்கள் ஏற்­ப­டுத்த வேண்டும்.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று உரு­வாக்­கு­வது தொடர்பில் உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்:- புதிய அர­சி­ய­ல­மைப்பு திருத்தும் ஒன்றை உரு­வாக்­கு­வது தொடர்பில் இரண்டு பிர­தான கட்­சி­களின் உறுப்­பி­னர்­களும் அதிக அக்­கறை செலுத்­து­கின்­றனர். ஜனா­தி­ப­தியும் நேற்று விசேட உரை ஒன்றை நிகழ்த்­தி­யுள்ளார். எனினும் எவ்­வா­றான ஒரு மாற்­றத்தை உரு­வாக்க போகின்­றனர் என்ற தக­வல்கள் எவையும் இன்னும் கிடைக்­க­வில்லை. ஆகவே பொறுத்­தி­ருந்தே பார்க்­க­வேண்டும்.

கேள்வி:- அண்­மையில் ஜனா­தி­பதி விடு­தலை உறுப்­பி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கினார். இது தொடர்பில் உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்:- விடு­தலைப் புலி­களை விடு­தலை செய்­வதும் எமது இரா­ணு­வத்தை தண்­டிக்க வேண்டும் என்­பதே இன்­றைய அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாக உள்­ளது. அர­சாங்­கத்தின் தேவையும் அது­வா­கவே உள்­ளது. ஆகவே சர்­வ­தேச நாடு­க­ளையும் புலம்­பெயர் அமைப்­பு­க­ளையும் திருப்தி படுத்த வேண்­டு­மாயின் அவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு உள்ளது. ஆகவே அதற்கமைய நடக்கின்றது. நல்லாட்சி என்ற மாற்றமும் அதற்காகதானே ஏற்பட்டது. ஆகவே இந்த விடயத்தில் ஆச்சரியமடைய தேவையில்லை. அதேபோல் இப்போது ஜனாதிபதி புலிகளுக்கு பொதுமன்னிப்பு கொடுத்து வருவதும் இந்த நல்லாட்சியின் ஒரு எடுத்துக்காட்டு என்றார்.