Breaking News

அடுத்தமாத இலங்கை வருகிறார் மனித உரிமை ஆணையாளர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த மாத முற்பகுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி சுபினே நந்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நேற்று அமைச்சர் ரிசாத் பதியுதீனைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அடுத்தமாதம் முன் அரைக்காலப் பகுதிக்குள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று, ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதி தெரிவித்துள்ள போதும், பயண நாள் குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

அதேவேளை, இந்தப் பயண ஏற்பாடு குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும், ஜெனிவாவில் இருந்தோ, இலங்கை அரசாங்கத்திடம் இருந்தோ இன்னமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.