Breaking News

கூட்டு எதிர்கட்சிக்குள் முரண்பாடு!

கூட்டு எதிர்க்கட்சியில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் ஒருவர் ஒன்றை கூறும்போது மற்றுமொருவர் வேறு ஒன்றை கூறுவதாகவும், பெயர் மாத்திரமே கூட்டிணைந்துள்ளதாகவும், அவர்கள் ஒற்றுமையாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலர் இரவு வேளையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், மேலும் சிலர் பிரதமர் ரணிலை சந்திப்பதாக அவர் கூறியுள்ளார்.

வெளியில் ஒரு கதையையும், கட்சிக்குள் ஒரு கதையையும், சிலர் எதிர்த்து வாக்களித்து வருவதாகவும், மேலும் சிலர் விஹாரைகளுக்குச் சென்று எதிர்ப்புகளை தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கூட்டிணையாத காரணத்தாலேயே கூட்டு எதிர்க்கட்சி என பெயர் வைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமதார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.