அரசியலமைப்பு சபை உருவாகுவதற்கான செயற்குழு தொடர்பாக இன்று விவாதம்
கடந்த 09 ஆம் திகதி பிரதமரினால் பாராளும ன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையொன்றினை உருவாக்குவதற்கான பாராளுமன்ற விசேட செயற்குழு தொடர்பிலான பிரேரணை மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதே வேளை இன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல்1.30 மணிவரை அரசியலமைப்பு சபை தொடர்பான விவாதம் நடைபெறுகிறது. இந்த பிரேரணை தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பிலும் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவாதத்தின் இறுதியில் திருத்தங்களை ஏற்றுக் கொள்ளவதா இல்லையா என்பது தொடர்பில் பாராளுமன்றத்தினாலேயே தீர்மானிக்கப்படவுள்ளது. இன்று வாக்கெடுப்பு எதுவும் நடைபெறாது என பிரதி சபாநாயகர் நீல் இத்தவெல தெரிவித்தார். மற்றொரு நாள் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்








