தமிழ் கைதிகளின் விடுதலை ; சில கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சி
தமிழ் கைதிகளின் விடுதலையை, அரசியல் இலாபம் தேடும் நோக்கங்களுக்காக சில அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதாக தமிழ் தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தமிழ் கைதிகளின் பிரச்சினையானது நாட்டு மக்களுடைய பிரச்சினை எனத் தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், தமிழ் கைதிகளின் பிரச்சினையை தீர்க்காமல் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியாது எனவும் குறிப்பிட்டார்








